27 ஈரான் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
27 ஈரான் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
ADDED : ஏப் 22, 2026 01:29 AM

நியூயார்க்: ஹார்முஸ் ஜலசந்தியில், கடந்த எட்டு நாட்களில், 27 கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும், ஒரு கப்பலை சுட்டுப் பிடித்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன் நடத்திய போரைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியையும் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லும் அல்லது வெளியே வரும் கப்பல்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
முற்றுகை அமலுக்கு வந்த 13ம் தேதியில் இருந்து தற்போது வரை ஈரான் தொடர்பான 27 கப்பல்களை திருப்பி அனுப்பியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஓமன் வளைகுடாவில் ஈரான் கொடியுடன் சென்ற, 'தவுஸ்கா' கப்பலை, 'யு.எஸ்.எஸ். ஸ்ப்ரூவான்ஸ்' என்ற வழிகாட்டி ஏவுகணை அழிப்பு கப்பல் மடக்கிப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
