தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி


ADDED : மார் 16, 2025 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 08:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் பல மாகாணங்களில் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ காரணமாக 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் சூறாவளி, புழுதிப்புயல், காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மிசோரி, அர்கன்சாஸ் மற்றும் கன்சாஸ் ஆகியவை மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மிசோரியில், இரவு முழுவதும் சூறாவளி தாக்கி, வீடுகளை இடித்து தரைமட்டமாகியது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையில், டெக்சாஸில், புழுதிப்புயலால் ஏற்பட்ட கார் விபத்துகளில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். புயல்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மேலும் பேரழிவை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். புயல் அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் தள்ளி உள்ளது. இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us