தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஈரான் லராக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் லராக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் லராக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்


ADDED : ஆக 31, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஈரானின் லராக் தீவு மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு தகுந்த பதிலடியும், தண்டனையும் வழங்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து இரு தரப்பும் எவ்வித தாக்குதலும் நடத்தாமல் இருந்தன.

இந்நிலையில் நேற்று, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானின் லராக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளை ஏவுவதற்கு ஈரான் தயாராக இருந்ததால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

இத்தாக்குதலில் சில வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலுக்கு தக்க பதிலடியும், உரிய தண்டனையும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

லராக் தீவு மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசிய நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us