ADDED : டிச 27, 2025 05:50 AM

புளோரிடா: நைஜீரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், கிறிஸ்துவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்ற ஞ்சாட்டி இருந்தா ர். மேலும், கிறிஸ்துவர்களுக் கு எதிராக நடக்கும் வன்முறைகளை நிறுத்தாவிட்டால், கடும் வி ளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நைஜீரிய அரசு, 'இந்த வன்முறை கிறிஸ்துவர்களுக்கு எதிராக மட்டும் நடக்கவில்லை. முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம், நைஜீரிய அரசுடன் இணைந்து, அந்நாட்டின் வடமேற்கில் உள்ள சொகோட்டோ மாகாணத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் கடற்படை கப்பலில் இருந்து டொமாஹாக் ஏவுகணைகளை ஏவி, பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், “நைஜீரியாவில் ஐ.எஸ்., அமைப்பின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது ஒரு துவக்கம் தான். வரும் நாட்களில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார்.

