வாய் கிழியப்பேசும் டிரம்ப் இனி அவ்வளவு தானா: தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் மறுப்பு
வாய் கிழியப்பேசும் டிரம்ப் இனி அவ்வளவு தானா: தண்டனையை நிறுத்தி வைக்க கோர்ட் மறுப்பு
UPDATED : ஆக 06, 2024 06:51 AM
ADDED : ஆக 06, 2024 06:47 AM

வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு காட்டிய விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தண்டனையை நிறுத்தி வைக்க, அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அதிபர் தேர்தலில் அவருக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 77, 2016ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற ஆபாச பட நடிகைக்கும் இடையேயான உறவு குறித்து கிசுகிசுக்கப்பட்டது.
இந்த விவகாரம் அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என கருதிய டிரம்ப், தன் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் வாயிலாக நடிகை ஸ்டார்மிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். இந்த பணத்தை சட்ட ஆலோசனைக்கான கட்டணம் என போலிக்கணக்கு காட்டி தந்துள்ளார்.
மறுப்பு
இது தொடர்பாக டிரம்ப் மீது பல்வேறு மாகாணங்களில் நான்கு கிரிமினல் வழக்குகளும், 34 மோசடி வழக்குகளும் பதியப்பட்டன. இந்த வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், இந்த விவகாரம் டிரம்பிற்கு தலைவலியை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.