தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா

 ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா

 ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா


ADDED : நவ 30, 2025 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே, அந்நாட்டு தேசிய காவல் படையை சேர்ந்த இருவர் மீது, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் சமீபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதை பயங்கரவாத செயல் என கூறியதுடன், இது முழு நாட்டிற்கான குற்றம் என குறிப்பிட்டிருந்தார். மேலும், மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுபவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்றத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆப்கானிஸ்தானியர்களின் குடியேற்ற விண்ணப்பங்கள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாகவும், மறு ஆய்வு முடியும் வரை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆட்சியில் ஜோ பைடன் நிர்வாகத்தின் போது அமெரிக்காவுக்கு வந்த ஒவ்வொரு வெளிநாட்டவர் குறித்தும் மறு ஆய்வு செய்ய அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us