sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்

/

அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்

அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்

அமெரிக்க வரி விதிப்பு இனி 10 சதவீதம்

18


ADDED : பிப் 21, 2026 10:59 AM

Google News

18

ADDED : பிப் 21, 2026 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பு இனி 10 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கள் நாட்டுக்கு வர்த்தக பற்றாக்குறை இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், தாறுமாறாக வரிகளை விதித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரிகளை விதித்தார். இதேபோல, வெவ்வேறு காரணங்களை கூறி, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுளுக்கும் வரி விதித்தார். இப்படி வரி விதிப்பதற்கு அதிபருக்கு அதிகாரம் இல்லை; அவரது முடிவுகள் சட்ட விரோதம் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறி விட்டது.

இதையடுத்து, அனைத்து நாடுகள் மீதான வரி விதிப்பும், இப்போது 10 சதவீதம் என்றே கணக்கிடப்படும் என்று அமெரிக்க வரித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியப் பொருட்கள் மீதான வரி விதிப்பும், இனி 10 சதவீதமாகவே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரி விதிப்பு விவகாரத்துக்கு பிறகு, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரிட்டன் என அனைத்து நாடுகளுக்கும் இனி வரி 10 சதவீதம் என்றே கணக்கிடப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள, முதல் கட்ட உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட இந்தியாவுக்கு 18 சதவீதம் வரி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் இனி மேல் 10 சதவீதமாக இருக்கும் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் வரி விதிப்புக்கு முன்னதாக இருந்த 3.5 சதவீதம் வரி விதிப்பும் கூடுதலாக வசூலிக்கப்படுமா அல்லது, 10 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படுமா என்பது பற்றி தெளிவான விளக்கத்தை இன்னும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை.

தற்போது வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரியை திருப்பித் தர வேண்டிய நிலைக்கு அமெரிக்க அரசு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொகை மட்டும் 140 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us