கொடூர கொலை குற்றவாளி ஹமீது நசீரை நாடு கடத்தணும்; இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
கொடூர கொலை குற்றவாளி ஹமீது நசீரை நாடு கடத்தணும்; இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
ADDED : டிச 06, 2025 07:25 PM

வாஷிங்டன்: அமெரிக்காவின் எப்பிஐ அமைப்பால் தேடப்படும் குற்றவாளி ' ஹமீத் நசீரை கைது செய்து, நாடு கடத்துமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வசித்த ஹனுமந்த் நாராவுடன், ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர் ஹமீது நசீர். இருவரும் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்தனர். ஹனுமந்த் நாராவின் மனைவி சசிகலா மற்றும் அவரது 6 வயது மகன் 2017ல் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, அமெரிக்க போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஹமீது நசீர் தான் அவர்கள் இருவரையும் கொலை செய்தது எப்பிஐ விசாரணையில் தெரிய வந்தது.
அதிகாரிகள் அவரை கைது செய்வதற்கு முன்பே, ஹமீது நசீர் அமெரிக்காவை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹமீது நசீர், இந்தியாவில் இருப்பதாகவும், டில்லியில் வசிப்பதாகவும் எப்பிஐ தெரிவித்துள்ளது.
நசீர் ஹமீத்தை கைது செய்வதற்கும், தண்டிப்பதற்கும் உதவும் வகையில் தகவல்களுக்கு 50,000 டாலர் வரை வெகுமதி அளிக்கப்படும் என எப்பிஐ அறிவித்துள்ளது.

