ADDED : ஜன 22, 2026 12:43 AM

நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் - உஷா வான்ஸ் தம்பதி நான்காவது குழந்தையை எதிர்பார்த்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில், துணை அதிபராக பதவி வகிக்கும், ஜே.டி. வான்ஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவை, 2014ல் காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு, ஈவான், 8, விவேக், 6, என்ற இரண்டு மகன்களும், மிராபெல், 5, என்ற மகளும் உள்ளனர்.
வான்ஸ் பல ஆண்டுகளாக நாட்டில் பிறப்பு விகிதங்கள் குறைவது குறித்து பேசியுள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிக்கு வரும் ஜூலை மாத இறுதியில் நான்காவதாக ஆண் குழந்தை பிறக்க உள்ளது.
வரலாற்று ரீதியாக, அமெரிக்கத் தலைவர்கள் பதவியில் இருக்கும்போது குழந்தைகளைப் பெறுவது அரிது. ஆனால், அதை உடைத்து ஜே.டி. வான்ஸ் துணை அதிபராக இருக்கும்போதே நான்காவது குழந்தையை பெற இருக்கிறார்.
அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குழந்தை பெற்றால் குடியுரிமை கிடையாது என்று அண்மையில் அறிவித்திருந்தார்.
தற்போது துணை அதிபர் ஜே.டி. வான்சின் மனைவி இந்திய வம்சாவளியாக இருப்பதால், இந்த குழந்தைக்கு குடியுரிமை கிடைக்குமா என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
