உள்ளடக்கத்திற்கு செல்ல

பிரிட்டனில் இருந்து போர் விமானங்களை வாபஸ் பெற்றது அமெரிக்கா
பிரிட்டனில் இருந்து போர் விமானங்களை வாபஸ் பெற்றது அமெரிக்கா
ADDED : அக் 05, 2026 11:23 AM

அ நிறம் | அளவு
லண்டன்: பிரிட்டனின் ராயல் ஏர் போர்ஸ் பேர்போர்டு விமானப்படை தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டு போர் விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்து வந்தது. இதனால், இந்த விமானப்படை தளத்திற்கு ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.
கடந்த வாரம் இந்த தளத்தின் மீது தாக்குதல் நடத்த லண்டனைச் சேர்ந்த 5 வாலிபர்கள் முயன்றனர். அவர்களை பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சதித்திட்டத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்று ஈரான் மறுத்தது.
அமெரிக்க போர் விமானங்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பப் பெற்றதாக பென்டகன் அறிவித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
