வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் : ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் 5வது முறை கோப்பை வென்றது இந்தியா
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் : ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கியில் 5வது முறை கோப்பை வென்றது இந்தியா
UPDATED : செப் 17, 2024 06:29 PM
ADDED : செப் 17, 2024 05:28 PM

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது.
சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி லீக் சுற்றில் அசத்தியது. சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.

அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காத அணி என்ற பெருமை இந்திய அணிக்கு கிடைத்து இருந்தது.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - சீனா ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி 5வது முறையாக கோப்பை வென்றது
சாதனை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலுக்கு இந்தியா 6வது முறையாக முன்னேறியது. இதில் 2011, 2016, 2018, 2023 என நான்கு முறை கோப்பை வென்றது. ஒருமுறை (2012) 2வது இடம் பிடித்தது. இன்று வெற்றி பெற்ற 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

