ADDED : செப் 21, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: புதிய விசாகட்டண உயர்வு குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவுக்கான எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக , அதாவது இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டெனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் இந்த புதிய கட்டண உயர்வு அனைத்து தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விசா கட்டண உயர்வு தொடர்பாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க விசா கட்டண உயர்வு புதிதாக விசா கேட்டு விண்ணப்பம் செய்பவருக்கு மட்டும் தான் 1 லட்சம் டாலர் கட்டணம். ஏற்கனவே எச்1பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு இந்த புதிய நடைமுறை பொருந்தாது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது