sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேசத்தில் விசா சேவை மீண்டும் தொடக்கம் : இந்திய துாதரக அதிகாரி தகவல்

/

வங்கதேசத்தில் விசா சேவை மீண்டும் தொடக்கம் : இந்திய துாதரக அதிகாரி தகவல்

வங்கதேசத்தில் விசா சேவை மீண்டும் தொடக்கம் : இந்திய துாதரக அதிகாரி தகவல்

வங்கதேசத்தில் விசா சேவை மீண்டும் தொடக்கம் : இந்திய துாதரக அதிகாரி தகவல்

3


ADDED : பிப் 19, 2026 05:50 PM

Google News

3

ADDED : பிப் 19, 2026 05:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் நிலவி வந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, இந்திய விசா சேவைகள் விரைவில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய துாதரக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கொந்தளிப்பை தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதை தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக பணியாற்றினார். அதன் பிறகு பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தாரிக் ரஹ்மான் (பிஎன்பி கட்சி) பிப்ரவரி 17, அன்று வங்கதேசத்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 18 மாத பணிக்கு பிறகு முகமது யூனுஷ் பதவி விலகினார்.

முன்னதாக, பாதுகாப்பு காரணங்களுக்காக 2025 டிசம்பர் மாதம் இந்தியா விசா சேவைகளை நிறுத்தியிருந்தது. தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், இவை அனைத்தும் சீராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக இந்திய துாதரக மூத்த அதிகாரி அனிருத்தா தாஸ் கூறியதாவது:சுற்றுலா விசாக்கள் உட்பட அனைத்து வகை விசா சேவைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவ மற்றும் 'டபுள் என்ட்ரி' விசாக்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவுகளின் மோசமான கட்டம் முடிவுக்கு வரும் என்பதற்கான அறிகுறியாக, விரைவில் வங்கதேசத்தில் அனைத்து விசா சேவைகளையும் முழுமையா மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அனிருத்தா தாஸ் கூறினார்.






      Dinamalar
      Follow us