அடுத்து எப்படி நடக்குமோ? நேற்று பேஜர்,இன்று வாக்கி - டாக்கி,நாளை எதுவோ: அலறும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்
அடுத்து எப்படி நடக்குமோ? நேற்று பேஜர்,இன்று வாக்கி - டாக்கி,நாளை எதுவோ: அலறும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள்
UPDATED : செப் 18, 2024 08:30 PM
ADDED : செப் 18, 2024 08:22 PM

பெய்ரூட் : லெபானானில் நேற்று ( செப்.,17) பேஜர் மின்னணு கருவி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து இன்று ( செப்.,18)வாக்கி -டாக்கி தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், லெபனானில் நேற்று ( செப்.,17) ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் உட்பட, எட்டு பேர் பலியாகினர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். . இவர்களில், 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இன்று ( செப்/.18) மீண்டும் வாக்கி-டாக்கி எனப்படும் தகவல் பரிமாற பயன்படுத்தப்படும் சாதனம் மூலம் தெற்கு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாயினர்.மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கும் இஸ்ரேல் காரணம் என கூறப்படுகிறது.