sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம்: பி.வி.சிந்து இணையத்தில் பதிவு

/

துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம்: பி.வி.சிந்து இணையத்தில் பதிவு

துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம்: பி.வி.சிந்து இணையத்தில் பதிவு

துபாயில் பாதுகாப்பாக இருக்கிறோம்: பி.வி.சிந்து இணையத்தில் பதிவு

2


ADDED : மார் 01, 2026 08:50 AM

Google News

2

ADDED : மார் 01, 2026 08:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தற்போது துபாயில் தனது அணியுடன் உள்ளார். அவர் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், 'நாங்கள் நலமாக இருக்கிறோம்; விரைவில் நிலைமை சீராகும் என நம்புகிறோம்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலுக்கு பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக துபாயில் நடத்திய தாக்குதலில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றமான சூழலில், பி.வி.சிந்து தற்போது துபாயில் தனது அணியுடன் உள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: போர் சூழ்நிலை காரணமாக விமான நிலையம் பரபரப்பாக உள்ளது. பல குடும்பங்கள் அங்கு சிக்கித் தவிக்கிறது. துபாய் விமானநிலையத்தில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு நடந்தது. அருகில் இருந்த எனது பயிற்சியாளர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

நேரம் ஆக ஆக நிலைமை இங்கு மோசம் அடைந்து வருகிறது. துபாய் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் துபாய் அதிகாரிகளின் அயராத முயற்சிகளுக்கு நன்றி. துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை பாதுகாக்க உதவினர். நிலைமை சரியாகும் வரை காத்திருப்போம். ​​நாங்கள் சிறிது ஓய்வெடுக்கவும் நம்பிக்கையுடன் இருக்கவும் முயற்சிக்கிறோம். இவ்வாறு பி.வி.சிந்து கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us