sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

/

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை


ADDED : மார் 02, 2026 05:47 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: “ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம்,” என, அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி நேற்று முன்தினம் கொல்லப்பட்டார். இது குறித்து, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் நேற்று கூறியதாவது:

கமேனியை படுகொலை செய்தது முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையான போர். இதற்கு அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உரிய பதிலடி தராமல் ஓய மாட்டோம். இந்த குற்றத்தை செய்தோர் வருந்தும் அளவிற்கு பதிலடி தருவோம். இது, முஸ்லிம் நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையாக தாக்குவோம்!


ஈரான் ப தில் தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும் என கூறுகிறது. அவ்வாறு தாக்குதலை ஈரான் அதிகரித்தால், பதிலடி பயங்கரமாக இருக்கும். இதுவரை கண்டிராத அளவுக்கு தாக்குதலை தீவிரப்படுத்துவோம்.

- டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர்



ஒன்றுபட வேண்டும்!


ஈரானின் இலக்குகளை தாக்கி அழிப்போம். அந்நாட்டு மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டிய தருணமிது. பயங்கரவாத ஆட்சியை துாக்கி எறிய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்








      Dinamalar
      Follow us