sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 'இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்'

/

 'இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்'

 'இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்'

 'இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்'


ADDED : மார் 11, 2026 03:08 AM

Google News

ADDED : மார் 11, 2026 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளம் - இந்தியா இடையேயான உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என, அங்கு ஆட்சி அமைக்க உள்ள, ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்சானே தெரிவித்து உள்ளார்.

நம் அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆர்.எஸ்.பி., எனும் தேசிய சுதந்திர கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து, அக்கட்சித் தலைவர் ரபி லாமிச்சானே, பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா ஆகியோருக்கு, நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து, ரபி லாமிச்சானே கூறி உள்ளதாவது:

நேபாள மக்களின் ஜனநாயக ஆணையை அங்கீகரித்ததற்காகவும், தங்களின் அன்பான வாழ்த்துக்கும் நன்றி.

ஆர்.எஸ்.பி., மற்றும் எங்கள் அரசு பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கும்.

வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எங்கள் கட்சி முன்னுரிமை அளிக்கும். கலாசார சுற்றுலா, எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி இரு நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதன் வாயிலாக இந்தியாவுடனான உறவு புதிய உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us