தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஆகா., இந்திய ஜனநாயகம்., அமெரிக்க வெள்ளை மாளிகை வியப்பு

ஆகா., இந்திய ஜனநாயகம்., அமெரிக்க வெள்ளை மாளிகை வியப்பு

ஆகா., இந்திய ஜனநாயகம்., அமெரிக்க வெள்ளை மாளிகை வியப்பு


UPDATED : மே 18, 2024 09:40 AM

ADDED : மே 18, 2024 09:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2024 09:40 AM ADDED : மே 18, 2024 09:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் ஆர்வமாக ஓட்டளிப்பதை பார்க்கும் போது இது போன்ற ஜனநாயக உணர்வை நினைத்து அமெரிக்கா மகிழ்வதாக அந்நாட்டு வெள்ளை மாளிகை உயர்மட்ட அதிகாரி பாராட்டி உள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு தொடர்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறியுள்ளதாவது: இந்தியாவில் நடந்து வரும் தேர்தலில் மக்கள் மிக ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். இது போன்ற ஜனநாயக உணர்வை உலகில் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்பது உண்மை. மக்கள் எதிர்கால ஆட்சி அமையவும், ஆர்வமாக ஓட்டளிப்பதையும் பார்த்து மகிழ்வதுடன் பாராட்டுகிறோம்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா, அமெரிக்கா உறவு மிக வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகத்தில் இந்தியாவுடன் நல்ல முன்னேற்ற புரிந்துணர்வு நிலவுகிறது. இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . இவ்வாறு கிர்பி கூறினார்.

ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள்


இந்தியாவில் 545 பார்லி., உறுப்பினர்கள் கொண்ட பார்லி.,க்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 2, 660 அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us