அதிபர் தேர்தலில் முந்துவது யார்? புது கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
அதிபர் தேர்தலில் முந்துவது யார்? புது கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
ADDED : செப் 20, 2024 11:18 AM

வாஷிங்டன்: அதிபர் தேர்தலை முன்னிட்டு நடந்த இரண்டாவது விவாதத்திற்கு பிறகு நடந்த கருத்துக்கணிப்பில் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். இதன் பிறகு நடந்த கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, வாக்காளர்கள் இடையே அதிக செல்வாக்கு இருப்பது தெரிந்தது.
இதனிடையே, கடந்த 10ம் தேதி நடந்த விவாதத்தில் இருவரும் கலந்து கொண்டனர். இரு கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்ட இரண்டாவது விவாதம் இதுவாகும். இது முடிந்த பிறகு, யாருக்கு செல்வாக்கு உள்ளது வாக்காளர்கள் மத்தியில் சில நிறுவனங்கள் இணைந்து 11-19 வரை கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தின.
விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கூறி அதிபராக 47 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டிரம்பிற்கு ஆதரவாக 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.