டிரம்ப்பை கையாள்வது எப்படி: மோடிக்கு ஆலோசனை வழங்குகிறார் நெதன்யாகு
டிரம்ப்பை கையாள்வது எப்படி: மோடிக்கு ஆலோசனை வழங்குகிறார் நெதன்யாகு
ADDED : ஆக 08, 2025 04:01 PM

டெல் அவிவ்: அதிபர் டிரம்ப்பை கையாள்வது எப்படி என பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் எனது நெருங்கிய நண்பர்கள். டிரம்ப்பை எப்படி கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு சில ஆலோசனை வழங்குவேன். ஆனால், தனிப்பட்ட முறையில் அதனை செய்வேன். விரைவில் நான் இந்தியா செல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு வலுவானது. அந்த நலனை கருத்தில் கொண்டு, இரு நாடுகளும், பொதுவான இடத்தில் ஆலோசித்து வரி பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். அந்தத் தீர்வானது இரண்டு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் உகந்தது. இவ்வாறு அவர் கூறினார்.