ADDED : மே 17, 2026 04:18 AM

வாஷிங்டன்: ''அணுசக்தி திட்டத்தை, 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க ஈரான் ஒப்புக் கொண்டால் ஏற்போம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி திட்டம் காரணமாக மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து போர் நடத்தி வரும் நிலையில், அமைதி பேச்சுக்காக தற்போது தற்காலிகமாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனை விதிப்பதும், அதை ஏற்க மறுப்பதும் தொடர்வதால் அமைதி பேச்சில் இழுபறி நீடிக்கிறது.
இந்நி லையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அணுசக்தி செறிவூட்டல் திட்டங்களை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முழுமையாக நிறுத்தி வைக்க ஈரான் ஒப்புக்கொண்டால், அதை அமெரிக்கா ஏற்கும். இதற்கு அந்நாட்டிம் இருந்து உறுதியான உத்தரவாதம் தேவை. ஈரான் சம்மதித்தால், அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
