கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையைஏற்று எகிப்தில் அமைச்சரவை மாற்றம்?
கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையைஏற்று எகிப்தில் அமைச்சரவை மாற்றம்?
ADDED : ஜூலை 13, 2011 12:34 AM
கெய்ரோ:'எகிப்து அமைச்சரவை ஒரு வார காலத்தில் மாற்றி அமைக்கப்படும்' என்று அந்நாட்டு பிரதமர் எஸ்ஸாம் ஷராப் அறிவித்துள்ளார்.எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின் போது, 900 அப்பாவி மக்களை கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உள்துறை அமைச்சரை பதவி நீக்கக் கோரியும் கிளர்ச்சியாளர்கள், தலைநகர் கெய்ரோ மற்றும் சூயஸ் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இக்குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மீதான விசாரணையை துரிதப்படுத்தும்படி பிரதமர் ஷராப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இன்னும் ஒரு வார காலத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்க இருப்பதாக பிரதமர் ஷராப் அறிவித்துள்ளார். அப்படி மாற்றி அமைக்கப்பட்டால், முபாரக் வீழ்ச்சிக்குப் பின்னர் செய்யப்படும் நான்காவது அமைச்சரவை மாற்றமாக இது அமையும்.இதற்கிடையே, அப்பாவி மக்களை கொன்ற போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொல்லும்படி, எகிப்து பாதுகாப்புப் படைக்கு பிரதமர் ஷரப் உத்தரவிட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.