தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பதவியில் இருந்து நீக்க மீண்டும் தீர்மானம் :தப்பிப்பாரா பிலிப்பைன்ஸ் துணை அதிபர்

பதவியில் இருந்து நீக்க மீண்டும் தீர்மானம் :தப்பிப்பாரா பிலிப்பைன்ஸ் துணை அதிபர்

பதவியில் இருந்து நீக்க மீண்டும் தீர்மானம் :தப்பிப்பாரா பிலிப்பைன்ஸ் துணை அதிபர்


UPDATED : மே 11, 2026 09:26 PM

ADDED : மே 11, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 11, 2026 09:26 PM ADDED : மே 11, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணிலா:பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா துதெர்தேவை பதவியில் இருந்து நீக்க, இரண்டாவது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ துதெர்தேவின் மகளான சாரா துதெர்தேவ் தற்போது அந்நாட்டின் துணை அதிபராக பதவி வகித்து வருகிறார்.

அரசு நிதி முறைக்கேடு, அதிபர் மார்கோஸ் ஜூனியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தது என, சாரா மீது பல புகார்கள் எழுந்தன. இதன்படி, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சாராவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தீர்மானத்தை நிறைவேற்றியதில் சில தவறுகள் இருப்பதாகக் கூறி, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு எதிராக இரண்டாவது முறையாக பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்க தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. சாராவுக்கு எதிராக 255 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர். வெறும் 26 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாக நின்றனர்; 9 பேர் நடுநிலை வகித்தனர்.

இந்த தீர்மானம் மேல் சபையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகம் பேர் ஒப்புதல் அளித்தால், சாரா துதெர்தேவ் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.

பிலிப்பைன்சில் வரலாற்றில், ஒரு பதவி காலத்தில் இரண்டாவது முறை பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us