தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/தீர்வாயத்தில் இன்று வினேஷ் போகத்திற்கு தீர்வு :வெள்ளி கிடைக்குமா ?

தீர்வாயத்தில் இன்று வினேஷ் போகத்திற்கு தீர்வு :வெள்ளி கிடைக்குமா ?

தீர்வாயத்தில் இன்று வினேஷ் போகத்திற்கு தீர்வு :வெள்ளி கிடைக்குமா ?


ADDED : ஆக 09, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2024 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ் : தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்துள்ள மேல்முறையீடு நாளை (ஆக.09) விசாரணைக்கு வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார்.

பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது.

இதனால் வினேஷின் பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது. 140 கோடி இந்திய மக்களின் நெஞ்சமும் தகர்ந்தது.

இந்நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன் மீது இன்று காலை அல்லது மதியம் (ஆக.09 ) தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us