அமெரிக்கா ஒரு மாதமாக நடந்த வேட்டையில் வைரத்தை கண்டெடுத்த பெண்
அமெரிக்கா ஒரு மாதமாக நடந்த வேட்டையில் வைரத்தை கண்டெடுத்த பெண்
ADDED : ஆக 14, 2025 11:55 PM
நியூயார்க்: அமெரிக்காவில் வைர வேட்டைக்கு பேர் போன ஆர்கன்சாஸ் மாகாண பூங்காவில் ஒரு மாதம் சல்லடைப் போட்டு தேடுதல் வேட்டை நடத்திய பெண் இறுதியில், 2 காரட் வைரத்தை கண்டெடுத்தார்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரபல பூங்காங்களில், 'கிரேட்டர் ஆப் டயமண்ட்ஸ் ஸ்டேட்' பூங்காவும் ஒன்று. மொத்தம், 37 ஏக்கர் பரப்பளவுள்ள பூங்காவில், பார்வையாளர்கள், வைரங்கள் மற்றும் பிற ரத்தினக் கற்களை தேடலாம். அவ்வாறு அவர்கள் கண்டுபிடிக்கும் கற்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
செயலிழந்த எரிமலையின் மேற்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 1,300 ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்தி வைர வேட்டையில் ஈடுபட அனுமதிக்கின்றனர். இதுவரை அங்கு 35,000க்கும் மேற்பட்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த மிச்செர் பாக்ஸ் என்ற பெண் கடந்த ஜூலை மாதம் முழுதும் பூங்காவில் வைர வேட்டையில் ஈடுபட்டு வந்தார். இறுதியில் அவர், 2.3 காரட் அளவுள்ள வைரக்கல்லை கண்டுபிடித்தார்.