புதிய இந்தியா நோக்கி பெண்கள்: இன்று உலக மகளிர் தினம்
புதிய இந்தியா நோக்கி பெண்கள்: இன்று உலக மகளிர் தினம்
UPDATED : மார் 09, 2023 11:51 AM
ADDED : மார் 08, 2023 01:03 AM

தாய் , சகோதரி, மனைவி , மகள் என நம் உறவு அனைத்திலும் இருப்பவர்கள் பெண்கள் , ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள் என கூறப்படுவது இதனால் தான்
நாம் வசிக்கும் நாடு கூட 'தாய் நாடு' என்று தான் அழைக்கப்படுகிறது. அதேபோல, ஆறுகள், மலைகள் என, முக்கியமான அனைத்திற்கும், பெண்களின் பெயர்தான் வைக்கப்படுகிறது. அந்தளவிற்கு, நம் நாடு, பெண்மையை போற்றுகிறது. தற்போது, உலக அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, சிறந்து விளங்குகின்றனர்.
ஐ.நா., சபையால் அறிவிக்கப்பட்ட, உலக மகளிர் தினம், ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து, பெண்கள் உரிமையை வென்றெடுத்த நாள் என, கருதப்படுகிறது. அந்த உரிமை யை வலியுறுத்துவதற்காகவே, ஆண்டுதோறும் மார்ச், 8ல் உலக மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது.