இந்திய தொழிலாளர்களுக்கு தென் ஆப்ரிக்காவில் நினைவிடம்
ஜோஹன்னஸ்பர்க்: கரும்பு தோட்டங்களில் பணிபுரிவதற்காக தமிழகம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இந்திய கூலிகளை ஏற்றிய முதல் கப்பல், 1860 நவம்பர் 16ல் தென் ஆப்ரிக்காவின் டர்பனுக்கு வந்தது. அதன், 165வது ஆண்டை ஒட்டி, தென்னாப்ரிக்க அரசு நினைவிடம் ஒன்றை அமைத்து வருகிறது.
பிரிட்டிஷ் அரசால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி தமிழகம், ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் 1860ல் கப்பல் மற்றும் படகுகளில் தென் ஆப்ரிக்காவை அடைந்தனர்.
ஆனால் இந்தியர்கள் பண்ணைகளில் அடிமைகளாக நடத்தப்பட்டனர். தற்போது அங்கு உள்ள க்வாசூலுநாடல் மாகாணத்தில், 18 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர்.
இந்நிலையில், அம்மாகாண அரசு இந்தியர்கள் வருகையின் 165வது ஆண்டை ஒட்டி, நினைவிடம் ஒன்றை அமைக்க துவங்கியுள்ளது. வரும் நவம்பர் 16ல் இது திறக்கப்பட உள்ளது.
இரண்டு கோடி மக்களுக்கு ஒரே ஒரு கண் டாக்டர்
போபோ டியோலாசோ: மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் 2.74 லட்சம் சதுர அடி பரப்பு கொண்டது. 2.30 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு குழந்தை கண் டாக்டர் ஒரே ஒருவர் மட்டுமே உள்ளார்.
இந்நிலையில், மேற்கு புர்கினா பாசோவைச் சேர்ந்த இசாகா என்ற சிறுவனுக்கு சமீபத்தில் கண்ணில் காயம் ஏற்பட்டது.
இரண்டு வாரங்கள் காத்திருந்து குழந்தை கண் டாக்டரை பார்த்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர், 'இது போன்ற காயங்கள் ஏற்பட்டால் ஆறு மணிநேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும். தற்போது காயம் மோசமாகிவிட்டது' என கூறியுள்ளார்.