உலகிலேயே கனிவான நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார்
உலகிலேயே கனிவான நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார்
ADDED : ஆக 22, 2025 08:17 AM

வாஷிங்டன்; கருணை மிகுந்த தீர்ப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார்.
அமெரிக்க பிரபல நீதிபதியும், சமூக ஊடக நட்சத்திரமுமான பிராங்க் காப்ரியோ,88. இவர் கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். இவரது நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் வழங்கும் தீர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
கருணை தீர்ப்புகள்: அவரது தீர்ப்புகள், கருணை அடிப்படையில் இருக்கும். வழக்கு விசாரணையும் எவர் மனதையும் புண்படுத்தாமல், காண்பவர் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும். நீதிமன்ற அறையில் அவரது கருணை மற்றும் நகைச்சுவை உணர்வுக்காக மிகவும் விரும்பப்பட்ட நீதிபதி கேப்ரியோ, 'காட் இன் பிராவிடன்ஸ்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபல மானார்.
உலகின் கனிவான நீதிபதி என்று அவரை பல்லாயிரக்கணக்கான பேர் கொண்டாடி வருகின்றனர். நீதிபதி காப்ரியோ தனது சொந்த ஊரான ரோட் தீவின் பிராவிடன்ஸில் ஆயிரக் கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார். தனது கடைசி சமூக ஊடகப் பதிவு ஒன்றில், நீதிபதி காப்ரியோ தனது உடல் நலம் குணம் அடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
நீதிபதி காப்ரியோவின் மனைவி ஜாய்ஸ் காப்ரியோ,60. இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

