நியூசிலாந்து பார்லியில் இளம் பெண் எம்.பி.,யின் கன்னிப்பேச்சு: வீடியோ வைரல்
நியூசிலாந்து பார்லியில் இளம் பெண் எம்.பி.,யின் கன்னிப்பேச்சு: வீடியோ வைரல்
UPDATED : ஜன 06, 2024 03:17 PM
ADDED : ஜன 06, 2024 11:10 AM

வெல்லிங்டன்: நியூசிலாந்து பார்லிமென்டில், 21 வயதான இளம் பெண் எம்.பி., ஒருவரின் ஆவேச பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி., ஆகி உள்ளார். மாவோரி இனத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 3 தலைமுறைகளுக்கு மேல் அரசியலில் உள்ளது. ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நனையா மஹூதா என்பவரை தோற்க்கடித்து எம்.பி., ஆக தேர்வாகி உள்ளார்.
இந்நிலையில், பார்லிமென்டில் அவர் மாவோரி பழங்குடியின மொழியில் தனது கன்னிப்பேச்சினை பதிவு செய்தார்.
அவர் பேசியதாவது: என்னுடைய இந்த முதல் உரையை எனது தாத்தா, பாட்டிகளுக்கு அர்ப்பணிக்கிறேன். இங்கு, வருவதற்கு முன்பு, எங்களிடம் பார்லிமென்டில் பேசப்படும் விவகாரங்களில் தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என சில அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால், உண்மையில் இந்த அவையில் கூறப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. அதிலும் அரசியல் இருக்கிறது. நாட்டுக்காக உயிரையும் தருவேன். அதேநேரத்தில் உங்களுக்காக வாழவும் செய்வேன் என்றார்.
தொடர்ந்து அவர் பழங்குடியின பழக்க வழக்கங்களுடன் நடனம் மற்றும் பாடலுடன் பேசியது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பழங்குடியின பழக்க வழக்கங்களுடன் நடனம் மற்றும் பாடலுடன் பெண் எம்.பி., பேசியது அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.