தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ வீடியோ ஆசையால் குரங்கிடம் கடி வாங்கி அவதிப்படும் இளைஞர்

 வீடியோ ஆசையால் குரங்கிடம் கடி வாங்கி அவதிப்படும் இளைஞர்

 வீடியோ ஆசையால் குரங்கிடம் கடி வாங்கி அவதிப்படும் இளைஞர்

1


ADDED : ஆக 22, 2026 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 11:19 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: குரங்கை பைக்கில் அமர்த்தி கொண்டு, வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் கடி வாங்கி அவதிப்படுகிறார்.

ஷிவமொக்கா நகரின் காசிபுரா லே - அவுட்டில் வசிப்பவர் குமார் நாயக், 28. இவர் தன் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார்.

நேற்று காலையில், பணி நிமித்தமாக வெளியே செல்வதற்காக, வீட்டில் இருந்து புறப்பட்டார். பைக் அருகில் வந்த போது, அதன் மீது குரங்கு அமர்ந்திருப்பது தெரிந்தது.

இதை பார்த்த அவருக்கு, வீடியோ எடுக்க ஆசை வந்தது. குரங்குடன் பைக்கில் பயணித்தபடி, வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட விரும்பினார்.

எனவே, பைக்கில் அமர்ந்து 'ஸ்டார்ட்' செய்தார். தன் அருகில் இளைஞர் அமர்ந்ததால், பயந்த குரங்கு அவரை தாக்கியது. அவரது வலது கையில் கடித்தது. குரங்கின் வாயில் இருந்து, தன் கையை விடுவித்து கொள்ள, குமார் நாயக் போராடினார்.

ஆனால், அதற்குள் அவரது கையில் சதைப்பகுதி துண்டானது. குரங்கு அங்கிருந்து ஓடிவிட்டது. ரத்த காயத்துடன் இருந்த இவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

'வன விலங்குகளின் அருகில் செல்ல கூடாது. அவை, ஆபத்தானவை. அவை கோபம் அல்லது பயத்தால் தாக்கக்கூடும்' என, வனத்துறை அதிகாரிகள் பல முறை எச்சரித்துள்ளனர்.

ஆனால் சிலர், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்துவதில்லை. குமார் நாயக்கும் குரங்குடன் பைக்கில் சுற்றி வந்து, வீடியோ எடுக்க முற்பட்டு கடிவாங்கி அவதிப்படுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us