UPDATED : அக் 05, 2024 09:17 PM
ADDED : அக் 05, 2024 02:49 AM

இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஜாகிர் நாயக்கின் ‛எக்ஸ்' கணக்கை மத்திய அரசு முடக்கியது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் நாயக், இவர் மீது பணமோசடி, வெறுப்பு பிரசாரம், பயங்கரவாதத்தை துாண்டியது என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
2016ல், நாட்டை விட்டு வெளியேறி மலேஷியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாகிர் நாயக் பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜாகிர் நாயக்கை தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, நேற்று ஜாகிர் நாயக்கின் 'எக்ஸ்' கணக்கை முடக்க மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.