அன்பும், அரவணைப்பும் அள்ளிய லைக்ஸ்..! உலகை உற்றுப் பார்க்க வைத்த மோடி-ஜெலென்ஸ்கி!
அன்பும், அரவணைப்பும் அள்ளிய லைக்ஸ்..! உலகை உற்றுப் பார்க்க வைத்த மோடி-ஜெலென்ஸ்கி!
ADDED : ஆக 24, 2024 10:12 AM

கீவ்; பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பகிர்ந்த சிறிது நேரத்திலேயே, அந்த பதிவு 20 லட்சம் லைக்ஸ் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஓயாத யுத்தம்
2022ம் ஆண்டு பிப்ரவரி 24ல் தொடங்கிய உக்ரைன், ரஷ்யா யுத்தம் இன்னமும் ஓயவில்லை. உக்ரைனின் 25 சதவீதம் பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலையில், போரை நிறுத்த பல நாடுகள் முயற்சித்தும் பலனிக்கவில்லை. கீவ்
போர்மேகங்கள் இன்னமும் கலையாத நிலையில் பிரதமர் மோடி கடந்த 21ம் தேதி போலந்து சென்றார். பின்னர் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணமானார். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. பேச்சுவார்த்தை
வழக்கமான சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு பின்னர், பிரதமர் மோடியும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் பேச்சு நடத்தினர். 3 மணி நேரம் கடந்தும் நீடித்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 4 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.உலக நாடுகள்
போர்க்கள பூமியில், உலக நாடுகளால் உற்றுபார்க்கப்பட்ட இந்த சந்திப்பு சர்வதேச அரசியல் களத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடனான சந்திப்பு அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இன்ஸ்டாகிராம்
இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடியை சந்தித்த போது ஜெலென்ஸ்கி அவருடன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். அதில் பரஸ்பரம் இருவரும் கட்டியணைத்துக் கொண்டு இருக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த புகைப்படத்தை ஜெலென்ஸ்கி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, வைரலாகி உள்ளது. 20 லட்சம் லைக்ஸ்
பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சம் லைக்குகளை கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உக்ரைன், ரஷ்யா போரினை நிறுத்தும் வல்லமை கொண்டவர் பிரதமர் மோடி என்று பல்வேறு நாடுகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த ஒற்றை போட்டோ, இணைய உலகில் பெரும் தாக்கத்தையும், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
