sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஒய்யாரா ஒடிசி நடனம்

ஒய்யாரா ஒடிசி நடனம்

ஒய்யாரா ஒடிசி நடனம்


பிப் 21, 2026

Favourite on Google

பிப் 21, 2026


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தில்லி லோதி ரோட் இந்திய ஹாபிடேட் மையம் ஸ்டெயின் கலை அரங்கில் குரு ஷரண் லோவன் மற்றும் அவரது மாணவர்கள் பங்கேற்ற ஒடிசி நடனம் நடைபெற்றது. ' நீலத்தாமரையிலிருந்துஅமிர்தம்' ( Nectar from Blue lotus ' என்ற தலைப்பில் கிருஷ்ண பக்தியை மையமாக வைத்து அவர்கள் நடனமாடினார்கள்.


பால முகுந்த மங்களாசரண் என்று சம்ஸ்கிருதத்திலும் ஆல மாமரத்தின் இலை மேல் என்று திருப்பாணாழ்வார் பாசுரத்தையும் இணைத்து ஆரம்ப நடனம் விஸ்வநாதன் மங்கராஜ் திரிஷா நந்தா, பெரினிலெகோலின், தேவந்தி தாஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினார்கள்.


அடுத்து ஸ்வாதியின் 'அலிவேணி எந்து செய்யுனு 'மலையாள பாடலுக்கு நிதிஷா நந்தா உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அடுத்தாற்போல் கவி பானமாலி தாஸரின் ஒரியா வரிகளில் ஆஜா மு தேகிலி கன ஷ்யாமா' கிருஷ்ணரை கொண்டாடி அவையோரை மகிழ்வித்தனர்.


பிரிஷ் பாஷையில் மீராவின் கவிதை வரிகள்.அருணிமாவின் அழகான நடன அசைவுகள் காண்போரை கவர்ந்தது.


தொடர்ந்து சம்ஸ்கிருத மொழியில் ' குரு யது நந்தனா' விஸ்வநாத மங்கராஜின் ஆழ்ந்த நடனம் அற்புதம்.


அடுத்து பெங்காலியில் சந்தி தாஸின் கவிதை வரிகள். ராதா கிருஷ்ணா உறவை பற்றியது.கிருஷ்ணரின் மேல் உள்ள அதீத காதலினால் ராதாவின் மனம் எதிலும் ஈடுபட மறுக்கிறது.கண்ணனின் புல்லாங்குழல் இசை அவளை அலைக்கழிக்கிறது.இப்படியான தவிப்பை நாட்டியத்தில் குரு ஷரன் லோவன் அற்புதமான முகபாவத்தில் காட்டி நம்மையும் உணர வைத் தார்.இறுதியாக தேவ தேவ கிருஷ்ண பந்து பாஹிமாம் என்ற நாம சங்கீர்தனத்துடன் சம்பிரதாய ஒடிசி நடன நிறைவை தந்தார்கள்.இப்படியாக கிருஷ்ண பக்தியை பல மொழிகளில் இருந்து கையாண்டு ஒடிசியில் தந்தது பாராட்டுதலுக்குறியது.


அன்றைய நடனத்திற்கு பண்டிட் பிரபுல்லா குமார் மங்கராஜ் மர்டாவிலும், வாய்ப்பாட்டு வாசுதேவன் அய்யங்கார் மற்றும் ஆஷிஷ் குமார் நாயக் , குழலிசை நீரஜ் பாண்டே சிதார் சோமேந்திர கோஸ்வாமி இணைந்து சிறப்பித்தனர்.


இறுதியில் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.


- தில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us