/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 131வது ஜெயந்தி மஹோத்ஸவம்

மே 24, 2024

புது தில்லி : ஆர்.கே.புரம் 1வது செக்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் கலாச்சார மையத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 131வது ஜெயந்தி மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டது. கணபதி பூஜை, ஆவஹந்தி ஹோமம், வேத பாராயணம், சஹஸ்ர அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
பதினைந்திற்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா பெரியவா படத்தை ஏந்தியவாறு மையப் பிரகாரத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர். பின்னர் ஸ்ரீ கணபதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்