/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
17வது ஆண்டு பிரதிஷ்டை தினக்கொண்டாட்டம்
/
17வது ஆண்டு பிரதிஷ்டை தினக்கொண்டாட்டம்

புது தில்லி : சத்பரியில் அமைந்துள்ள சத்குரு ஸ்ரீ ஞானானந்த சேவா சமிதி தனது 17வது ஆண்டு பிரதிஷ்டை தினத்தை மிக சிறப்பாக கொண்டாடியது. காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இதைத் தொடர்ந்து தபோவன தினசரி வழிபாடு, மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் கலசங்கள் நிறுவப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ரித்விக்குகள் இதில் திரளாக பங்கேற்று லகுன்யாஸ ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர்.
தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி செய்யப்பட்டது. பின்னர் கலசங்கள் நாதஸ்வரம் மேள தாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பாண்டுரங்கனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஜயப்பன், அனுமன், பிள்ளையார் திருவுருவச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனைக்கு பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலையில் நடந்த சம்பிரதாய பஜனையில் அஷ்டபதி மற்றும் திவ்யநாம சங்கீர்த்தனம் இடம் பெற்றது. தீப பிரதக்ஷிணத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்