/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 21வது வருட ராதா கல்யாண மஹோத்சவம்
/
ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 21வது வருட ராதா கல்யாண மஹோத்சவம்
ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 21வது வருட ராதா கல்யாண மஹோத்சவம்
ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 21வது வருட ராதா கல்யாண மஹோத்சவம்
ஏப் 07, 2024

புது தில்லி, ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கத்தின் 21வது வருட ராதா கல்யாண மஹோத்சவம் மும்பை சுந்தர ராமன் பாகவதர் குழுவினரால் மிகச்சிறப்பாக ரோஹிணி செக்டர் 16-ல் மா ஆத்ய சக்திதாம் மந்திரில் ஏப்ரல் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ரோஹிணி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சங்கத்தினர் செய்திருந்தினர்.
6-ம் தேதி காலை 6.00 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ மகா பெரியவாள் பூஜை, ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயணத்தை தொடர்ந்து மும்பை சுந்தர ராமன் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய அஷ்டபதி பஜனையுடன் முடிவடைந்தது. தில்லி உமா அருண் (வயலின்), கோவை ராமச்சந்திரன் (மிருதங்கம்) சாகேத் (டோல்கி), மற்றும் மணிகண்டன் (ஹார்மோனியம்) பக்க வாத்தியம் வாசித்தனர். கே.ஆர்.எஸ்.மணி ஐயர் மற்றும் பத்மநாபன் குரல் ஆதரவு தந்தனர்.
மதியம் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, ஸ்ரீ கண்ணன் ராதா உருவப்படம் கொண்ட பல்லக்குடன் வீதிவுலா தொடங்கியது. ஏராளமான குழந்தைகள் மற்றும் மங்கையர்கள் பரவசத்துடன் கோலாட்டமாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை மற்றும் டோலோத்ஸவத்துடன் முதல் நாள் வைபவம் நிறைவுற்றது.
7-ம் தேதி காலை 6.00 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. ஸ்த்வருத்தி என்னும் உஞ்சவிருத்தி, அதை தொடர்ந்து பகவானுக்கு சீர்கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பிறகு ஸ்ரீராதா கல்யாண மஹோத்சவம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவம் ஆகியன நடைபெற்றன.
ரோகினி ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சத்சங்கம் அமைப்பின் சார்பில் “நாமசங்கீர்த்தன பிரச்சாரகா” விருதை இந்த வருடம் மும்பை சுந்தர ராமன் பாகவதருக்கு வழங்கி கௌரவித்தனர். நாமசங்கீர்த்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர். சத்சங்கத்துடன் தொடர்புடைய மற்ற சில நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆன்மீக அன்பர்கள் பல இடங்களில் இருந்து வந்து திரளாக கலந்து கொண்டனர். எல்லோருக்கும் மஹாபிரசாதம் வழங்கப்பட்டது. சுமார் 200 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டஶ்ரீ ராதா கல்யாண உற்சவம், அறுசுவை உணவுடன் நிறைவுபெற்றது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்