
நொய்டா செக்டர் 22 ல் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 51 ல் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், கேந்திரியா விஹாரில் 'ஆடிப்பூரம்' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றதுடன் திருப்பாவை, மற்றும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் வாசித்தனர். ஸ்ரீ துர்க்கைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது. மகா தீபாராதனை முடிந்த உடன் மகா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை ஜெகதீஷ் சிவாச்சாரியார் செய்தார்.
ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் ஸ்ரீ துர்க்கைக்கு மட்டுமல்லாமல் ஸ்ரீ திருபரசுந்தரி அம்மனுக்கும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் இதர ஸ்லோகங்களும், அம்பாளை போற்றிய பாடல்களும் பாடினார்கள். தொடர்ந்து, மகா தீபாராதனை முடிந்தவுடன் பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் அனைத்தும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா செய்தனர்.
அனைத்து அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள், தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் நடப்பது போலவே செய்யப்பட்டது.
ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், , ஸ்ரீ துர்க்கைக்கு சிறப்பு அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டது . அனைத்து பூஜை மற்றும் அலங்காரங்களையும் ஸ்ரீ விஸ்வநாதன் குருக்கள் செய்தார். ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், கேந்திரிய ஆஸ்திக சமாஜம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்