
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் இரு கோயில்கள்: ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவில், செக்டர் 62, மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில், செக்டர் 22, ஸ்ரீ துர்கை அம்மனுக்கும் மற்றும் திரிபுர சுந்தரி அம்மனுக்கும் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவ்விரு கோவில்களும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வகித்துவருகிறது.
உலக மக்களை காப்பதற்க்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் நடப்பது போலவே பக்தர்களுக்காக வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் ஏற்பாடு செய்திருந்தனர். எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அனைத்து அலங்காரம், பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் : மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, மற்றும் ஜெகதீசன் சிவாச்சார்யார் செய்தனர். பக்தர்கள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆடி பூரம் பூஜைகளில் கலந்து கொண்டனர்.
ஆடிப்பூரம் மிக சிறப்பாக நடத்தி கொடுத்ததற்காக, கோவில் நிர்வாகம், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மண்டலி போன்றோரின் சேவையை பாராட்டினார். இந்த இனிய நாளில் பக்தர்கள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகம் படித்தனர், திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டது, மற்றும் தேவி கீர்த்தனைகள் பாடினார்கள். மகா தீபாராதனையுடன் மகா பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்