/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் பகவதி சேவை
/
துவாரகா ஸ்ரீராம் மந்திரில் பகவதி சேவை
ஜூலை 29, 2024

புது தில்லி : ஆடி மாதத்தை ஓட்டி, துவாரகா ஸ்ரீராம் மந்திரில், ராஜேஷ் சாஸ்திரிகள் தலைமையில், பகவதி சேவை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பகவதி சேவை, வருடத்தில் ஒவ்வொரு ஆடி மாதமும் அன்னை ராஜ ராஜேஸ்வரிக்குச் செய்யப்படும் சக்திவாய்ந்த பூஜை ஆகும். அன்னை ராஜேஸ்வரி, செல்வம், குழந்தைப்பேறு, மற்றும் ஏராளமான வளங்களை அளிக்கவல்ல சக்தி படைத்த தெய்வம். அவளுடைய அருளைப் பெற இந்த பூஜை உதவுகிறது.
இந்த பகவதி சேவை பூஜை, கைகளால் வரையப்பட்ட வண்ணத்தாமரை மற்றும், பூகோள வடிவத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பெரிய அகல் விளக்கில் உள்ள அன்னை ராஜராஜேஸ்வரியின் சக்தியை தூண்டுகிறது. இந்த விளக்கு வைக்கப்பட்டுள்ள சக்திபீடத்தில் உள்ள வண்ணங்கள் பஞ்ச பூதங்களை குறிப்பதாக உள்ளது. சக்தி தூண்டப்படும்போது, தெய்வம் அந்த விளக்கில் ஒளி வடிவமாக பிரசன்னமாகி பக்தர்களுக்கும் அருள்பாலிப்பார்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்