செப் 28, 2026

அ நிறம் | அளவு
நொய்டா சங்கர மடத்தில் சண்டி ஹோமம்
புனிதமான பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நொய்டா செக்டர் 42-ல் அமைந்துள்ள ஆதிசங்கராச்சாரியார் திருக்கோயில் (சங்கர மடம்) வளாகத்தில், செப்டம்பர் 26, சனிக்கிழமை அன்று சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.
வேத பண்டிதர்கள் குழுவினரால் சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் உடன், வேத பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு பூஜைகளில் பக்தியுடன் பங்கேற்றனர். ஹோமம் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா தீபாராதனைக்கு பின்னர், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. அம்பிகையின் அருள் அனைவருக்கும் நல்வாழ்வு, ஆரோக்யமும், ஆனந்தமும் பெருகட்டும்.
- நொய்டாவில் இருந்து எஸ்.வெங்கடேஷ்
