
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகா கணபதி கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, காலை சம்பூர்ண ஸ்ரீமன் நாராயணீயம் மூல பாராயணம் நடைபெற்றது. மாலை குருவாயூரப்பனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. 'நாட்டியகலா கிருஹா' பள்ளி மாணவியர்கள் இதில் பங்கேற்று நடனமாடினர். ஆஸ்திக சமாஜம் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்