தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ நொய்டா கோவில்களில் 'தனுர் மாத பூஜைகள்

நொய்டா கோவில்களில் 'தனுர் மாத பூஜைகள்

நொய்டா கோவில்களில் 'தனுர் மாத பூஜைகள்


ஜன 14, 2026

Follow on GoogleFavourite on Google

ஜன 14, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா கோவில்களில் 'தனுர் மாத பூஜைகள் நொய்டாவில் உள்ள வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி பி எஸ்) ஒவ்வொரு ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், தனுர் மாத பூஜைகள் செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், மற்றும் ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில்,பிரிவு 62, நொய்டாவில் நடந்தன.
தினசரி ருத்ரா அபிஷேகம், ஸ்ரீ ராமர் பரிவாரத்திற்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. தனுர் மாதத்தின் ஒரு பகுதியாக த்ரிபுரசுந்தரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்த பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதே போல் தினசரி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் பிள்ளையாருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.தவிர, ஹனுமான் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாத வீதி பஜனை, ஆருத்ரா தரிசனம், கூடாரவல்லி, அனைத்து பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூடாரவல்லி முன்னிட்டு, ஸ்ரீ ஜே ராமகிருஷ்ணன் பாகவதர், மற்றும் சாய் கிருபா, திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள், இதர கீர்த்தனைகளை வழங்கினார்.
இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான தென்னிந்திய கோவில்களில் நடைபெறும் அதே வரிசையில் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. பூஜைகள், அபிஷேகம் அனைத்தும் கோவில் வாத்தியார்கள்: ஸ்ரீ மணிகண்டன் சர்மா,ஸ்ரீ மோஹித் மிஸ்ரா, ஸ்ரீ ஜெகதீசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு காலையில் பிரசாதமாக'பஞ்சாமிர்தம், மற்றும் வெண் / சர்க்கரை பொங்கல்' விநியோகிக்கப்பட்டது.
கோயில் நிர்வாகம், கடும் குளிர், காற்றின் தரம் மோசமான நிலையை பொருட்படுத்தாமல், அனைத்து பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு அல்லாமல், சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய, தினமும் அதிகாலையில் கோவிலுக்கு வருகை தந்த உறுப்பினர்களான ஏ பாலாஜி, எஸ் வெங்கடேஷ், ராஜேந்திரன், வெங்கட்ராமன், சுவாமிநாதன், ஜானகி, ரேணுகா சிவராமன், காயத்ரி ஜெகதீஷ், அர்ஜுன் ஐயர், நாராயணன், பலரையும் பாராட்டியது.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us