தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/தெய்வீக நவராத்திரி கொண்டாட்டம்

தெய்வீக நவராத்திரி கொண்டாட்டம்

தெய்வீக நவராத்திரி கொண்டாட்டம்


அக் 12, 2026

Follow on GoogleFavourite on Google

அக் 12, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வீக நவராத்திரி கொண்டாட்டம்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குருக்களின் பரிபூரண ஆசியுடன், நவராத்ரி மஹோத்ஸவத்தின் முதல் நாளான 11.10.26 அன்று, புது தில்லி ஆர்.கே.புரம், செக்டார்-1-ல் அமைந்துள்ள ஶ்ரீ காஞ்சி காமகோடி பீட கலாச்சார மையத்தில் அஞுக்ஞை, குருவந்தனம், விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், புண்யாகவசனம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை ஆகியவை விமரிசையாக நடைபெற்றன.
மாலை நேரத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில், இசைப் பிரியர்களை மெய்மறக்கச் செய்யும் வகையில் விதூஷி நளினி பாஸ்கரின் இன்னிசையும், சௌம்யாவின் வயலின் நாதமும், வித்வான் மன்னை கண்ணனின் மிருதங்க வாசிப்பும் இணைந்து வழங்கப்பட்ட அற்புத கர்நாடக சங்கீதக் கச்சேரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
​ஸ்ரீ மகாபலேஷ்வர் பட் தலைமையில் வேத பண்டிதர்களின் குழுவினரால் தினசரி பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பாராயணங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த திவ்யமான நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் ​காலை மற்றும் மாலை வேளைகளில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம். வி. தியாகராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us