/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாக்ஷி மந்திரில் ஏகாதச ருத்ர ஜப பாராயணம்
ஏப் 28, 2024

புது தில்லி சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோயிலில், ஏப்ரல் 28 காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றது. பதினைந்திற்கும் மேற்பட்ட ரிக் வேதிகள் இதில் பங்கேற்றனர். சுவாமிநாதன் சாஸ்திரிகள் இதனை நடத்தி வைத்தார்.
இதையடுத்து, ஸ்ரீ மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. நிறைவாக தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு 3வது ஞாயிற்றுக்கிழமையும் ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்