/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம்
/
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம்
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம்
சாலிமார் பாக் ஸ்ரீ மீனாட்சி கோவிலில் ஏகாதச ருத்ர பாராயணம்
அக் 20, 2024

புதுதில்லி சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில் காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், லகுன்யாஸ ஸ்தோத்திரம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றது. ஸ்ரீவித்யா உபாசகர் எஸ். கே. மூர்த்தி தலைமையில் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பதினொரு ஆவர்த்தி ஏகாதச ருத்ரம் பாராயணம் செய்தனர்.
இதையடுத்து, பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரினை எடுத்து மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிரதி மாதம் மூன்றாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் இக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் நிறைவில், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ். கே. மூர்த்திக்கு திருவாரூர் டி. எஸ். ஸ்ரீராம் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகி எம்.வீ.தியாகராஜன் சால்வை அணிவித்து மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
கோவில் தலைவர் வி. ஆர். சுவாமிநாதன், துணைத் தலைவர்கள் ராதாலட்சுமி மற்றும் ஏ. ரமேஷ், பொது செயலாளர் எஸ். வெங்கடேஸ்வரன், பொருளாளர் உன்னி கிருஷ்ணன்,இணை செயலாளர், வி. அருண ஜடேசன், பண்டிட் ஜிக்யாஸ் மிஸ்ரா, சமூக ஆர்வலர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, ஜி. பாலசுப்ரமணியன், என். ஜி. கிருஷ்ணன், நொச்சூர் வெங்கடேஸ்வரன் மற்றும் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்