தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஏகாதச ருத்ர பாராயணம்

ஏகாதச ருத்ர பாராயணம்

ஏகாதச ருத்ர பாராயணம்


ஏப் 20, 2025

Follow on GoogleFavourite on Google

ஏப் 20, 2025


Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுதில்லி: சாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலில், ஏப்ரல் 20, காலை 9.00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், லகுன்யாஸ ஸ்தோத்திரம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைபெற்றது. ஸ்ரீவித்யா உபாசகர் எஸ். கே. மூர்த்தி தலைமையில், வேத விற்பன்னர்கள் மற்றும் ரித்விக்குகள் பலர் இதில் பங்கேற்று பதினொரு ஆவர்த்தி ஏகாதச ருத்ரம் பாராயணம் செய்தனர்.

இதையடுத்து, பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரினை எடுத்து மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


பிரதி மாதம் மூன்றாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும், ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம் இக்கோயிலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us