/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
நொய்டா வி.பி.எஸ் நிறுவனர் வேதமூர்த்திக்கு பாராட்டு
/
நொய்டா வி.பி.எஸ் நிறுவனர் வேதமூர்த்திக்கு பாராட்டு
நொய்டா வி.பி.எஸ் நிறுவனர் வேதமூர்த்திக்கு பாராட்டு
நொய்டா வி.பி.எஸ் நிறுவனர் வேதமூர்த்திக்கு பாராட்டு
நவ 11, 2024

நொய்டாவின் வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் (வி. பி. எஸ்) நிறுவன உறுப்பினராக சேவை புரிந்து வரும் வி.வேதமூர்த்திக்கு அவருடைய தொடர்ச்சியான சேவைகளுக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வி பி ஸ் இன் நிறுவனர் உறுப்பினர்களில் ஒருவரான இவர், நொய்டா செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலை பிரபலமாக்குவதில் முக்கியமான ஒருவராவார். நொய்டாவில் உள்ள பழமையான கோயிலாகவும் கருதப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் 1987-ம் ஆண்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.
வி பி ஸ் இன் தலைவர் ரவி சர்மா, மற்றும் பிற மூத்த உறுப்பினர்கள் அவர் பணிபுரிந்த அவரது அர்ப்பணிப்பு குறித்து பேசினார், மேலும் அடுத்த தலைமுறை, சமூக சேவை செய்வதில், வேதமூர்த்தி போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், பிரசாதத்துடன், அன்பளிப்பு வழங்கப்பட்டது. குடும்பத்தின் நிர்பந்தங்கள், மற்றும் காலத்தின் கட்டாயத்தினால், வேதமூர்த்தி வயதான காரணத்தை கருத்தில் கொண்டு, பெங்களூரில் வசிக்கும் தனது மகனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த்துள்ளார். வி.வேதமூர்த்தி, அவரது மனைவி மாலினி வேதமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ, நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்