தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோயில்களில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா கோயில்களில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா கோயில்களில் விநாயகர் சதுர்த்தி


செப் 14, 2026

Follow on GoogleFavourite on Google

செப் 14, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, நொய்டாவில் உள்ள கோவில்களில் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலையில், ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.


இதேபோன்று நொய்டா, செக்டார் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கணபதி ஹோமத்திற்கு பிறகு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரு கோயில்களிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ கணேசர் அருளைப் பெற்றனர்.


இச்சிறப்புப் பூஜைகள் அனைத்தும் வைதீகப் பிரதிநிதி ஸ்ரீ ஸ்ரீராம் குருக்கள் தலைமையில், ஸ்ரீ மணிகண்ட ஷர்மா, ஸ்ரீ மோஹித் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ ஜெகதீஷ் சிவாச்சாரியார் ஆகியோரின் உதவியுடன் சிறப்பாகச் செய்து வைக்கப்பட்டன. நிறைவாக, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us