/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஹனுமன் சாலீசா பாராயணம்
/
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஹனுமன் சாலீசா பாராயணம்
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஹனுமன் சாலீசா பாராயணம்
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் ஹனுமன் சாலீசா பாராயணம்
மார் 13, 2024

புது தில்லி : ஸ்ரீ ராம் மந்திர் துவாரகாவில் இம்மாதம் நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக முடிப்பதற்காக, 1.2.24 முதல் 12.3.24 (41 நாட்கள்) தினமும் மாலை 5.30 மணி முதல் ஹனுமான் சாலீசாவை இராம பக்தர்கள் பாராயணம் செய்யத் தொடங்கினர். பகவான் ஸ்ரீராமரின் ஆசியுடன் வெற்றிகரமாக இது நடந்து முடிந்தது. 12 ஆம் தேதி காலை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் செய்யப்பட்டது. மாலையில் 11 முறை ஹனுமன் சாலீசாவை பாராயணம் செய்து, அஷ்டோத்ர அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து அபிஷேகப் பிரசாதம் வழங்கினர். ஏழு குழந்தைகள் ஒரு மிக்க மனதுடன் பாடியது மிகவும் குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்