/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
போபால் நகரில் கம்பன் கழகம்! கோலாகல துவக்கம்
/
போபால் நகரில் கம்பன் கழகம்! கோலாகல துவக்கம்
ஆக 25, 2025

போபால்: மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் கம்பன் கழகம் துவக்க விழா விமர்சையாக நடந்தது. டில்லி மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் பங்கேற்றனர்.
போபால் கோவிந்த்புராவில் உள்ள கேரியர் கல்லூரி அரங்கத்தில் (ஆக.23) நடைபெற்ற விழாவில் மத்தியப் பிரதேச மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங் கலந்து கொண்டு போபால் கம்பன் கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
போபால் கம்பன் கழகத் தலைவர் முனைவர் கா.பா. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். கம்பன் கழகச் செயலாளர் பா.குமார் வரவேற்புரை ஆற்றினார். எத்தியோப்பியா தொழிலதிபர் முனைவர் எம் ஜே ராஜேஷ் துவக்க உரையாற்றினார். டில்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் இரா முகுந்தன் முன்னிலை வைத்தார். டில்லி கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி கே பெருமாள் போபால் கம்பன் கழகத்தை வாழ்த்திப் பேசினார்.
உச்சநீதிமன்றத் தமிழ் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ராம்சங்கர், பேராசிரியர் ஸ்ரீதரன், போபால் தொழிலதிபர் பாஸ்கரன், விஞ்ஞானி அசோகன் பப்பு, வடோதரா தமிழ் சங்கத் தலைவர் சி பி கண்ணன், போபால் தமிழ்ச் சங்கத் தலைவர் பி ராஜு, பேராசிரியர் தேவராஜ், கனரா வங்கி துணை ப் பொது மேலாளர் ஜீவானந்தம், சித்தி புத்தி விநாயகர் கோவில் வினோத் சாஸ்திரிகள் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர் .
சென்னை கம்பன் கழகச் செயற்குழு உறுப்பினரும் ஆன்மிக சொற்பொழிவாளருமான கி. சிவகுமார் கலந்துகொண்டு ' கம்பமாக்கடல் ' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். சரிதா ராஜன் நன்றி கூறினார்.
நாட்டியம், இசை கச்சேரி
முன்னதாக செல்வி ஆராத்தியா ஐயரின் ஸ்ரீ கணேசன் நடனம், கலா கேந்திரா குழுவினரின் கம்பன் பாமாலை, சிறுமயுகா நாட்டியாலயா ரேவதி வினோத் மாணவியர் பங்கு பெற்ற நாட்டிய நிகழ்ச்சி, தில்லி வயலின் இசைக் கலைஞர் மாஸ்டர் ஹரி கார்த்திக், மிருதங்க இசைக் கலைஞர் மாஸ்டர் ரத்துல் குமார் ஆகியோர் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டில்லி தமிழ் கல்விக் கழக ஆசிரியர் ம. மனோஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நமது செய்தியாளர், எம்.வி. தியாகராஜன்.